உங்கள் ஓட்டு யாருக்கு? / Exclusive Article
![]() |
| சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் போஸ்டர் |
இந்த ஆளுங்கட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சுமார் 2000 கோயில்களை இடித்துள்ளனர். நம் சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா என்று இழிவாக பேசுகிறார் த்து.முதல்வர். அறநிலைய துறைக்கு கீழ் இயங்கும் கோயில் அர்ச்சகர்களுக்கு சரிவர ஊதியம் கொடுப்பதில்லை. தமிழகத்தை பொறுத்த வரையில், மதுபானத்திற்கு அடுத்ததாக கோயில்களில்தான் அதிக வருமானத்தை அரசாங்கத்திற்கு வாரி கொடுக்கிறது.
| AI காட்சி |
அப்படியிருக்க, கோயில் அர்ச்சகர்களுக்கு தாராளமாகவே ஊதியம் வழங்கலாமே! மேலும், கோயிலில் வேலை செய்யும் பியூன் முதல் ஜே.சி வரை அனைவரும் அரசாங்க ஊழியராக வேலை பார்க்கிறார்கள். ஆனால், கோயிலில் மிக முக்கிய பணிகளை செய்யும் அர்ச்சகர்களை ஏன் அரசு ஊழியராக அங்கீகாரம் செய்யக்கூடாது?
ரமலான், கிறிஸ்துமஸ் என்று பண்டிகை நாட்கள் வந்தால், உடனே வாரிகட்டிக் கொண்டு இரு திராவிட கட்சிகளும் வாழ்த்துகளை தெரிவிப்பார்கள். ஆனால், இந்துக்களின் பண்டிகையான, விநாயக சதுர்த்தி, கோகுலாஷ்டமி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்தால், வாழ்த்துச் செய்திகூட இல்லை. இதுதான் இவர்களின் சமத்துவ கொள்கை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ADVT
-----------------------------------------------------------------------------------------------------------------------------
| இஸ்லாம் மத நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்கும் முதல்வர் |
இஸ்லாமிய வழிபாட்டில் உருது மொழி வாசிக்கப்படுகிறது, கிறித்துவ வழிபாட்டில் ஆங்கிலம் வாசிக்கப்படுகிறது, இந்துக்களின் கோயிலில் சமஸ்கிரதம் மொழி வாசித்தால், அது தவராம்! சரி... பல இந்து கோயில்களில் ``நாலாயிரம் திவ்ய பிரபந்தம்'', ``திருவாசகம்'' போன்ற அழகிய தமிழில் வழிபாடுகள் நடைபெறுகின்றதே... இதே போல் வேறு மதத்தில் உள்ளனவா?
இன்று நம் இந்து மாணாக்கன், குறிப்பாக பிராமண மாணாக்கன் இட ஒதுக்கீடு காரணமாக அவதியுற்று வருகின்றார்களே.. இதற்கு விடிவு காலமே இல்லையா? 200க்கு 180 மார்க் பெற்றும் அரசாங்க வேலை கிடைக்கவில்லை. ஆனால், இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி வெறும் 120 மார்க் பெற்றால் போதும் அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைத்துவிடும்.
இதற்கு பெயர்தான் சமத்துவமா? இந்த இட ஒதுக்கீடு, சுமார் 50 ஆண்டு காலமாக நம்மை படாதபாடு செய்கிறது.
![]() |
| AI மாதிரி |
கடந்த ஐந்து ஆண்டுகளில், எத்தனை பிராமண மாணாக்கனுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது? மேலும், படிப்பு முதல் வேலை பெறுவது வரையில் இட ஒதுக்கீடு காரணமாக துன்பங்களை சந்தித்து வருகின்றார்கள்.
அதுபோக, சினிமா முதல் அரசியல் வரை நாம் அவர்களுக்கு கில்லு கீரையாக காட்சியளிக்கிறோம். இதற்கு காரணமென்ன? நமக்கான (பிராமணர்) வாக்கு வங்கி இல்லாததுதான். சிறுபான்மையினர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்களின் அதே சதவீதத்தில்தான் நாமும் (பிராமணர்கள்) இருக்கிறோம். பின்னர் அவர்களுக்கு மட்டும் ஏன் கரிசனம்?
----------------------------------------------------------------------------------------------------------------------------- ADVT
-----------------------------------------------------------------------------------------------------------------------------
காரணம் ஒன்றே ஒன்றுதான். வாக்கு வங்கி! சிறுபான்மையினர்கள் அனைவரும் ஒன்று கூடும் வழிபாட்டு தலங்களில், யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்று அறிவிக்கிறார்கள். உதாரணத்திற்கு; இஸ்லாமியர்கள் வழிபாடு செய்யும் தர்காவில், நாம் அனைவரும் இன்னாருக்குத்தான் ஓட்டு போடவேண்டும் என்று ஜமாத் தலைவர் அறிவிக்கிறார்கள். மேலும், அவர்கள் நடத்தும் பத்திரிகையிலும்கூட எழுதுகிறார்கள். அதுவும் ஆன்மீக பத்திரிகை!
![]() |
| ஜமாத் அறிவித்த அறிக்கை |
இனியாவது விழிப்போம்! நம் சமூகம் ஒன்றுபட வேண்டும். யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பதைவிட, யாருக்கு ஓட்டு போடக் கூடாது என்பதில் திடமாக இருப்போம். வாழ்க பாரதம்! வளர்க பிராமணத்துவம்!!
✎ரா.ரெங்கராஜன்
----------------------------------------------------------------------------------------------------------------------------தேதி: 21.04.2026
தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------








கருத்துகள்
கருத்துரையிடுக